பெட்ரோலிய எண்ணெய் குழாய் பதிப்பு விவகாரத்தில் நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும்- தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தல்…

published 3 days ago

பெட்ரோலிய எண்ணெய் குழாய் பதிப்பு விவகாரத்தில் நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும்- தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தல்…

கோவை: கோவை மாவட்டம் இருகூரில் இருந்து கர்நாடக மாநிலம் தேவனஹல்லி வரை பெட்ரோலிய எண்ணெய் குழாய் பதிப்பு திட்டத்திற்கு எதிராக அப்பகுதி விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். 

இந்தத் திட்டத்தை கைவிடக் கோரி பலமுறை அரசிடம்  முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் சில விவசாயிகள் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி மனு தாக்கல் செய்தனர். தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் அந்த எண்ணெய் குழாய் பதிப்பிற்கு தற்காலிக தடை விதித்துள்ளது.

இந்நிலையில் நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் நடத்த உள்ளதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமாக கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து இன்று நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க உள்ளனர்.

இதுகுறித்து பேசிய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க துணைச் செயலாளர் கணேசன், இது சம்பந்தமாக அமைச்சர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியும் தீர்வு எட்டாத நிலையில் போராட்டம் நடத்தியதாகவும் அப்போதெல்லாம் தினமும் கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டதாக தெரிவித்தார். 

இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்காலிக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என தெரிவித்தார். மேலும் ஏற்கனவே விவசாயிகளிடம் எந்த ஒரு அனுமதியும் பெறாமலும்  கருத்துக்கணிப்பு கேட்காமலும் இந்த திட்டத்தை துவக்கி உள்ளதாக குற்றம் சாட்டிய அவர்  25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குழாய் பதிப்பிற்கு மட்டுமே அனுமதி கையெழுத்திட்டதாகவும் ஆனால் தற்பொழுது புதிதாக போடப்படும் குழாய்களுக்கு எந்த ஒரு அனுமதியும் பெறவில்லை என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe