பெற்றோர்களுடன் பயணிக்கும் பள்ளி மாணவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்- கோவை மாநகர காவல் ஆணையாளர் வலியுறுத்தல்...

published 3 days ago

பெற்றோர்களுடன் பயணிக்கும் பள்ளி மாணவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்- கோவை மாநகர காவல் ஆணையாளர் வலியுறுத்தல்...

கோவை: சாலை பாதுகாப்பு குறித்து கோவை மாநகர காவல்துறை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை இராமநாதபுரம் பகுதியில் உள்ள டிரினிட்டி பள்ளியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் 500 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஓவியம் மூலம் சாலை பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி தத்ரூபமாக வடிவமைத்து காட்சிபடுத்திருந்தனர்.அதே போல மழலையர் குழந்தைகள் ,ஹெல்மெட்,சீட்பெல்ட் அவசியம், குடி போதையிலும் செல்போன் பேசிக்கொண்டும் வாகனத்தை இயக்க கூடாது என்பது பற்றி தெரு கூத்து மற்றும் பாடல் வரிகள் மூலம் உறுதிமொழி எடுத்துக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதனை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் மாநகர காவல் போக்குவரத்து துணை ஆணையர் அசோக்குமார் ஆகியோர்  பார்வையிட்டனர்.

தொடர்ந்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்,சாலை பாதுகாப்பு குறித்து பள்ளி கல்லூரி மாணவர்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், பள்ளி குழந்தைகள் அனைவரும் பெற்றோகளிடம் ஒரு மாத பாக்கெட் மணியை வாங்காமல்,அதற்கு பதிலாக ஹெல்மெட் வாங்கி தரும்படி கேட்டு கட்டாயம் ஹெல்மெட் அணிந்து பயணம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

சாலை பாதுகாப்பில் பெற்றோர்களுக்கு பள்ளி குழந்தைகள் ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். அதே போல சாலை பாதுகாப்பு குறித்து பள்ளி குழந்தைகளுக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் கற்று கொடுப்பது அவசியம் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe