தமிழர்கள் ஒன்றாக இல்லாததால் ஈழத் தேர்தலில் பல இடங்களை இழந்துள்ளோம்- கோவையில் பிரபாகரன் பிறந்தநாளில் தபெதிக தெரிவிப்பு...

published 6 days ago

தமிழர்கள் ஒன்றாக இல்லாததால் ஈழத் தேர்தலில் பல இடங்களை இழந்துள்ளோம்- கோவையில் பிரபாகரன் பிறந்தநாளில் தபெதிக தெரிவிப்பு...

கோவை: தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கேக் வெட்டி கொண்டாடினர். 

பிரபாகரன் புகைப்படத்துடன் கூடிய கேக்கை வெட்டி கொண்டாடியவர்கள்  பிரபாகரன் புகழ் வாழ்க, தமிழீழம் வெல்க போன்ற முழக்கங்களை எழுப்பினர்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தந்தை பெரியார் திராவிடர் கழக அமைப்பு செயலாளர் ஆறுச்சாமி, உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் எனவும், 1985 ஆம் ஆண்டு முதல் தந்தை பெரியார் திராவிடர் கழகம் பிரபாகரனின் பிறந்தநாளை கோவையில் கொண்டாடி வருவதாக தெரிவித்தார். 

பிரபாகரன் இங்கு வாழ்ந்த காலத்தில் அவருடன் இணைந்து இருந்ததாகவும் அந்த வகையில் பிரபாகரன் கோவைக்கு புதிதல்ல விடுதலைப் புலிகளும் கோவைக்கு புதிதல்ல என்றார். 300க்கும் புலிகள் கோவையில் பயிற்சி பெற்றுச் சென்றிருப்பதாகவும் ஆனால் தற்பொழுது உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் பிரிந்து கிடக்கின்ற காரணத்தினால் நடந்து முடிந்த ஈழத் தேர்தலில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களை தமிழர்கள் இழந்துள்ளார்கள் என தெரிவித்தார்.

இனிவரும் காலத்தில் இதை எல்லாம் மறந்து அனைத்து தமிழர்களும் ஒன்றாக இருப்போம் "எட்டுக்கோடி தமிழனுக்கும் எங்கும் சுதந்திர நாடில்லை வெட்டிப் பேச்சு ஏனபா வேண்டும் வேண்டும் தமிழீழம் வேண்டும்" என்று சொல்வோம் அதே குரலை மையமாக வைத்து தமிழீழம் மலர்வதற்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருக்கக்கூடிய தமிழர்களும் சேர்ந்து உழைப்போம் என்று உறுதி ஏற்போம் எனத் தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe