எதனால் மின்வெட்டு செய்கிறார்கள் தெரியுமா? - பா.ஜ.க அண்ணாமலை கோவையில் பேட்டி

published 2 years ago

எதனால் மின்வெட்டு செய்கிறார்கள் தெரியுமா? - பா.ஜ.க அண்ணாமலை கோவையில் பேட்டி

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :  https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

கோவை: தமிழகத்தில் செயற்கை மின்வெட்டை உருவாக்கி தனியாரிடம் மின்சாரத்தை வாங்குவது திமுக.,விற்கு கைவந்த கலை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டால் கிராமப்புற மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மின்வெட்டை பார்க்கும் பொழுது 2006 இல் இருந்து 2011 வரை இருண்ட கால ஆட்சியாக இருந்த திமுக ஆட்சியின் ட்ரெய்லர் போல் உள்ளது.

இதற்கு மத்திய அரசு தர வேண்டிய நிலக்கரியை தருவதில்லை என முதல்வர் மற்றும் மின்துறை அமைச்சர் குற்றம்சாட்டி வருகிறார்கள். அதனைத் தெளிவுபடுத்த வேண்டியது பாஜகவின் கடமை. இந்தியாவில் 2.22 கோடி டன் நிலக்கரி இருப்பில் உள்ளது. அப்படியிருக்கையில் தமிழகத்தில் மட்டும் வினோதமாக மின்வெட்டு எப்படி வருகிறது?

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி இருப்பு இருந்தும் தமிழக அரசு ஏன் 4 பவர் ஸ்டேஷன்களில் உற்பத்தியை நிறுத்தி வைத்தது? தமிழகத்தில் செயற்கை மின்வெட்டை உருவாக்கி தனியாரிடம் மின்சாரத்தை வாங்குவது திமுக.,விற்கு கைவந்த கலை.

டேன்ஜெட்கோ நஷ்டத்தில் இருப்பது குறித்து 2006ஆம் ஆண்டிலிருந்து 2022வரை வெள்ளை அறிக்கை வேண்டும். தமிழகத்தில் மட்டும் 8 மணி நேரத்திலிருந்து 10 மணி நேரம் வரை மின்வெட்டு உள்ளது

என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe