மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை...

published 1 week ago

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை...

கோவை: திருவள்ளுவரின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு கோவை ஆட்சியர் அலுவலகத்தில் வைத்துள்ள வள்ளுவர் சிலை முன்பு மக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கள் கிழமை அன்று மனுநீதி நாள் முகாம் நடைபெறும், இங்கு மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, சூலூர், வால்பாறை போன்ற மாவட்டத்தின் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனு அளிக்க வருவது வழக்கம். அதேபோன்று இன்றும் மனு அளிக்க வந்தனர்.

இந்நிலையில் முக்கடலும் சந்திக்கும் கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவர் சிலை நிறுவி 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சியை உலகத் தமிழர்கள் அனைவரும் கொண்டாட தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். அதன் அடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டு உள்ளது.

இங்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள் கண்டு செல்பி எடுத்து மகிழ்ந்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து மகிழ்ந்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe