கோவையில் கற்றல் இனிது திட்டம் தொடக்கம்

published 1 day ago

கோவையில் கற்றல் இனிது திட்டம் தொடக்கம்


கோவை: லோட்டஸ் பவுண்டேசன் நிறுவனர் சந்தோஷி ராஜேஸ் பிறந்தநாளை முன்னிட்டு மலை வாழ் மக்களின்  மாணவ,மாணவிகள் இடை நிற்றல் கல்வியை தொடர "கற்றல் இனிது" திட்டம் துவக்கம்.

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை உள்ளடக்கிய ஒன்றியத்திற்கு உட்பட்ட பழைய சர்க்கார்பதியை மலையகப் பகுதியில் இடைநிற்றல் காரணமாக மேற்கொண்டு கல்வியைத் தொடர இயலாதவர்கள் என சுமார் 50-ற்கும் மேற்பட்டோர் இருக்கின்றனர் இந்நிலையில் லோட்டஸ் பவுண்டேஷன் நிறுவனர் சந்தோஷி ராஜேஷ் தனது பிறந்த நாளை முன்னிட்டு தலைமுறை நல்லவிதமாக உருக்கொள்ள கல்வியே சிறந்த அடித்தளம் என்கிற அடிப்படையில் இடைநிற்றலுக்கு ஆளாகியி உள்ள சுமார் 35 மலைவாழ்  மாணவ மாணவியர்கள் கல்வியை செவ்வனே தொடர கல்வி சார்ந்த பொருட்களை அவர்களுக்கு வழங்கி "கற்றல் இனிது" திட்டத்தைத் துவக்கிவைத்தார்
தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை அவர் வழங்கினார். இதற்கான துவக்க விழாவில் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் பொள்ளாச்சி வனச்சரகத்திற்குட்டபட்ட வனத்துறையினர் பலரும் பங்கேற்று மாணவ, மாணவியரை வாழ்த்தி ஊக்கப்படுத்தினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe