கேஸ் லாரி ஓட்டுனர் கைது; 8 பிரிவுகளில் வழக்கு...!

published 3 days ago

கேஸ் லாரி ஓட்டுனர் கைது; 8 பிரிவுகளில் வழக்கு...!

கோவை: கோவையில் எல்.பி.ஜி லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுனர் ராதாகிருஷ்ணன் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

கொச்சியிலிருந்து வந்த LPG கேஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரி நேற்று அவினாசி சாலை பழைய மேம்பாலத்தில் விபத்துக்கு உள்ளாகி கவிழ்ந்தது. கோவையின் மையப்பகுதியில் 18 டன் எல்.பி.ஜி கேஸ் உடன் இருந்த டேங்கர் கவிழ்ந்து கேஸ் கசிவு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து அனைத்து துறை அதிகாரிகளின் 8 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, சாலையில் கவிழ்ந்த டேங்கர், பலத்த பாதுகாப்பாக அகற்றப்பட்டது.

18 டன் கேஸ் நிரம்பிய டேங்கரை கவனமாகக் கையாண்டு, அசம்பாவிதங்களைத் தடுத்த அதிகாரிகளுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

இதனிடையே டேங்கர் லாரி ஓட்டுனர் மீது கோவை போக்குவரத்து புலனாய்வு போலீசார் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் (BNS 281), மரணம் விளைக்கக்கூடிய வித்தத்தில் ஓட்டுதல் (BNS 110), வாகனத்தை வேகமாக ஓட்டுதல் BNS 324 (4) , வெடிபொருள் சட்டம் (9 B), பெட்ரோலியம் ஏக்ட் (23), என்விராண்டல் ஏக்ட் (8 R/W 15), மோட்டார் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்துள்ளனர்.

அவினாசி சாலை மேம்பாலத்தின் ரவுண்டானா குறுகலாக உள்ளது. இந்த மேம்பாலத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும், புனரமைக்க வேண்டும் என்று கோவை மக்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், அவ்வழியாகச் சென்று விபத்தில் சிக்கிய ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளது சக ஓட்டுனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe