பொங்கல் பண்டிகை- மருதமலைக்கு நான்குசக்கர வாகனங்களுக்கு தடை...

published 1 day ago

பொங்கல் பண்டிகை- மருதமலைக்கு நான்குசக்கர வாகனங்களுக்கு தடை...

கோவை: மருதமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் எதிர்வரும் 14.01.2025 முதல் 19.01.2025 வரை பொங்கல் திருவிழா மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு கோயிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவதை கருத்திற்கொண்டு மேற்படி நாளில் மலைக்கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு சக்கர வாகனங்கள் மூலமாகவும், மலைப்படிகள் வழியாகவும், திருக்கோயிலின் பேருந்து மற்றும் திருக்கோயில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகளில் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe