கோவையில் சானிடைசர் ஊற்றி கணவன் மீது தீ பற்ற வைத்த மனைவி போலீசார் விசாரணை…

published 1 week ago

கோவையில் சானிடைசர் ஊற்றி கணவன் மீது தீ பற்ற வைத்த மனைவி போலீசார் விசாரணை…

கோவை: கோவையில் குடும்ப தகராறில் கணவன் மீது சானிடைசர் ஊற்றி தீ வைத்த மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோடு ஸ்ரீபதி நகரை சேர்ந்தவர் சரவணன்(39). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி கவுசல்யா தேவி(37). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 

இந்த நிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோல், நேற்றும் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த கவுசல்யா தேவி வீட்டில் இருந்த சானிடைசரை சரவணன் மீது ஊற்றி தீ பற்ற வைத்தார். 

தீ உடலில் பரவியதால் வலி தாங்க முடியாமல் சரவணன் உடனே வீட்டில் இருந்த பெட்ஷீட்டை தனது மேல் போர்த்தி தீயை அணைத்தார். இதில் அவருக்கு காதில் தீக்காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 

இது குறித்து ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் கவுசல்யா தேவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குடும்ப தகராறில் கணவன் மீது மனைவியே தீ பற்ற வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe