Happy Street நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறிய அதிர்ச்சி தகவல்- சோகத்தில் ஆழ்ந்த மக்கள்…

published 1 day ago

Happy Street நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறிய அதிர்ச்சி தகவல்- சோகத்தில் ஆழ்ந்த மக்கள்…

கோவை: கோவை மாநகரில் ஆர் எஸ் புரம் பகுதியில் கடந்த ஐந்து வாரங்களாக நடைபெற்று வந்த Happy Street நிகழ்ச்சியானது 6வது வாரமான இன்று அவினாசி சாலை கொடிசியா பகுதியில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு ஆடல் பாடல் என மகிழ்ந்தனர். 

மேலும் இங்கு ஆர் எஸ் புரம் பகுதியில் இருப்பது போலவே டயர் ஓட்டுதல்,  குண்டு விளையாடுதல் சாலையில் பரமபதம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் கூடுதலாக வனவிலங்குகளின் புகைப்பட கண்காட்சி மற்றும் விபத்து காலங்களில் முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு இப்பகுதிகளில் சுமார் 40-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். 
அடுத்த வாரம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு Happy Street நிகழ்ச்சி நடைபெறாது எனவும் அதற்கு அடுத்த வாரம் மீண்டும் தொடரும் என ஏற்பாட்டாளர்கள்  தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் Happy Street நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைத்து மக்களும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe