கோவையில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் கைது...

published 1 day ago

கோவையில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் கைது...

கோவை: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்புதல், ஊராட்சி செயலாளர் களுக்கு சிறப்பு நிலை தேர்வு நிலை வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்குதல், பதவி உயர்வை கால தாமதமின்றி வழங்குதல், கலைஞர் கனவு இல்லம் ஊரக வீடுகள் பழுது நீக்கம் உள்ளிட்ட அனைத்து வீடுகள் கட்டும் திட்டங்களுக்கும் உரிய பணியிடங்களை ஏற்படுத்துதல்,  பிற துறை பணிகள் திணிக்கப்படுவதை கைவிடுதல், உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டமானது அந்தந்த மாவட்டங்களில் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட சங்கத்தின் சார்பில்  ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. இதில் 30 க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். 

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் இருந்து  கோரிக்கை முழக்கங்களை எழுப்பியவாறு வெளியில் வந்த அவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe