கட்சி கொடி, அம்பேத்கர் புகைப்படத்துடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்த காங்கிரஸ் கட்சியினர்...

published 1 week ago

கட்சி கொடி, அம்பேத்கர் புகைப்படத்துடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்த காங்கிரஸ் கட்சியினர்...

கோவை: அம்பேத்கார் குறித்து அமித்ஷா பேசிய விவகாரம்- காங்கிரஸ் கொடியுடன், முழக்கங்கள் எழுப்பியவாறு ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்த காங்கிரஸ் கட்சியினரால் பரபரப்பு ஏற்பட்டது.

அம்பேத்கார் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த, ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை பதவி விலக ஜனாதிபதிக்கு  பரிந்துரை செய்ய  வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

டாக்டர் அம்பேத்கார் குறித்து குறித்து நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் காங்கிரஸ், திமுக, உள்ளிட்ட எதிர்கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட காங்கிரஸ் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை பதவி விலக வலியுறுத்தியும், அவரை கண்டித்தும் கோசங்களை எழுப்பியவாறு  அம்பேத்கார் புகைப்படத்தை கையில் ஏந்தி கொண்டு, ஊர்வலமாக ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். 

தொடர்ந்து, ஆட்சியிரிடம்  ஒன்றிய அமைச்சர் பதவி விலக ஜனாதிபதிக்கு  பரிந்துரைக்க வலியுறுத்தி மனு அளித்தனர். திடீரென காங்கிரஸ் க் கொடி மற்றும் அம்பேத்கர் படத்துடன் ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe