மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம்- பொங்கல் தொகுப்புடன் 5000 தர வலியுறுத்தல்…

published 1 day ago

மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம்- பொங்கல் தொகுப்புடன் 5000 தர வலியுறுத்தல்…

கோவை: கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை 3 ஆயிரமாக உயர்த்திட வேண்டும், கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தில் வீடு வழங்க வேண்டும், வாரிய பதிவு ஆன்லைன் முறையில் எளிமையாக்கி பணப்பயன்களை இரு மடங்காக உயர்த்திட வேண்டுமென வலியுறுத்தி இன்று சிஐடியு சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கோவை மாவட்ட சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மக்களுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்ட அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் வேஷ்டி சேலை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe