புத்தாண்டை உற்சாகத்துடன் கொண்டாடிய கோவை மக்கள்...

published 6 days ago

புத்தாண்டை உற்சாகத்துடன் கொண்டாடிய கோவை மக்கள்...

கோவை: உலகம் முழுவதும் ஜனவரி 1 ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024"ஆம் ஆண்டு நிறைவு அடைந்து 2025 ஆம் ஆண்டு பிறந்து உள்ளது.

இந்த புத்தாண்டு தினத்தை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக 2025" ம் ஆண்டுக்கான ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக கோவை உள்ள தனியார் வணிக வளாகங்களில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஆடல், பாடலுடன் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள மீடியா டவர் வண்ண விளக்குகளால் மிளிர்ந்தது. கோவையில் பல்வேறு பகுதிகளில் இருந்து குவிந்த இளைஞர்கள் அங்கு உற்சாகமாக பாடி, ஆடி, நடனம் ஆடினர் கொண்டாடி மகிழ்ந்தனர்.

காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியார் படிப்பகம் முன்பு தமிழர்களின் பாரம்பரிய கலையான பெண்களின் பறை இசை முழுங்க ஆட்டம், பாட்டத்துடன் கேக் வெட்டி கொண்டாடினர்.

இங்கு உள்ள பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நிகழ்ச்சிகள் நடந்தது இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு இயேசுவின் முன்னாள் மண்டியிட்டு மனம் உருகி பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.

வாகனத்தில் சென்ற இளைஞர்கள் சாலையில் இருந்த குழந்தைகளிடம் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.  

குறிப்பாக கோவை மாநகரப் பகுதிகளில் ஆங்கில புத்தாண்டு இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe