அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக கோவையில் பாஜக ஒட்டியுள்ள போஸ்டர்- போஸ்டரில் இடம்பெற்றுள்ள மறைமுக விமர்சன வார்த்தைகள்...

published 5 days ago

அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக கோவையில் பாஜக ஒட்டியுள்ள போஸ்டர்- போஸ்டரில் இடம்பெற்றுள்ள மறைமுக விமர்சன வார்த்தைகள்...

கோவை: பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் துணை நிற்பதே பாஜகவின் பழக்கம்
கருப்பு சிவப்பு நரிகளிடமிருந்து பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதை எங்கள் முழக்கம்! என கோவையில் ஒட்டப்பட்டுள்ள பாஜக போஸ்டர்...

சென்னை அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் மீது எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு எதிர்கடசிகள் கண்டன ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இவ்விவகாரத்தை குறிப்பிட்டு சாட்டையால் தன்னை தானே அடித்து கொண்டார்.

இந்நிலையில் கோவை மாநகரில் "பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் துணை நிற்பதே பாஜகவின் பழக்கம்.
கருப்பு சிவப்பு நரிகளிடமிருந்து பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதை எங்கள் முழக்கம்!" என்ற வாசகங்களுடன் காந்திபுரம் பாலசுந்தரம் சாலை உள்ளிட்ட இடங்களில்  பாஜக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் புகைப்படம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பிரதமர் மோடியின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe