கோவை சுங்கம் பகுதியில் மருத்துவமனையில் செவிலியரின் விபரீத முடிவு!

published 2 days ago

கோவை சுங்கம் பகுதியில் மருத்துவமனையில் செவிலியரின் விபரீத முடிவு!


கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவிலை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவருடைய மகள் தன்யா (20). இவர் கோவை சுங்கம், பாரிநகர் பகுதியில் உள்ள மனு என்ற தனியார் மருத்துவமனையில் பயிற்சி செவிலியர் ஆக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று, மருத்துவமனையின் 3 - வது மாடிக்கு சென்ற தன்யா, மாடியில் இருந்து கீழே குதித்தார். இதனால் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்த அவரை, மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து கோவை ராமநாதபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.  தற்கொலை காவல்துறையினர் தற்கொலை குறித்தான காரணம் தெரியவில்லை மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe