காட்டுப்பன்றிகளை சுடுதல் குறித்து கோவை விவசாயிகள் அளித்த மனு...

published 1 day ago

காட்டுப்பன்றிகளை சுடுதல் குறித்து கோவை விவசாயிகள் அளித்த மனு...

கோவை: காட்டுப் பன்றிகளை சுடுவதற்கான அறிவிப்பு சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டது அதனை உடனடியாக நிறைவேற்ற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் பழனிச்சாமி தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்று அளித்துள்ளனர் இதுகுறித்து அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது தமிழக சட்டப்பேரவையில் காட்டுப் பன்றிகளால் ஏற்படும் இழப்புகளை தடுக்கவும் விவசாயிகளின் விலை பயிர்களை பாதுகாக்கவும் காட்டுப் பன்றிகளை சுடுவதற்கு அனுமதி அளித்து சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

எனவே அந்த அறிவிப்பை உடனடியாக கோவையில் செயல்படுத்த வேண்டும் அதை கோவையில் இருந்து ஆரம்பித்து வைக்க வேண்டும் யார் யாருக்கெல்லாம் அனுமதி எவ்வாறு செயல்படுவது என்பது போன்ற வழிகாட்டுதல்களோடு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என அந்த மனதில் குறிப்பிட்டுள்ளனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe