Breaking News: கோவையில் போலீஸ் ஐ.பி.எஸ் அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம்!

published 1 week ago

Breaking News: கோவையில் போலீஸ் ஐ.பி.எஸ் அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம்!

கோவை: கோவை மாநகரில் பணியாற்றி வரும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட 56 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.

தமிழகம் முழுவதும் 56 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்தும், இதில் சிலருக்கு பதவி உயர்வு வழங்கியும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, கோவை மாநகர காவல் ஆணையராக பணியாற்றி வந்த பாலகிருஷ்ணன், சென்னை டி.ஜி.பி அலுவலக நிர்வாக ஐ.ஜி-ஆக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை வடக்கு சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பணியாற்றி வந்த ஸ்டாலின், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மாநகரில் தெற்கு துணை ஆணையராக பணியாற்றி வந்த சரவணக்குமார் சென்னை தெற்கு பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை மண்டல டிஐஜி யாக பணியாற்றி வரும் சரவண சுந்தருக்கு ஐ.ஜி-ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவர் தற்போது கோவை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எவ்வித சார்புகளும் இல்லாமல், கோவை செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நியூஸ் க்ளவுட்ஸ் செய்திக்குழுவில் இணைவீர்: https://chat.whatsapp.com/CQ78cBq2Gn00cQtG7fXjDn 

சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த தேவநாதன் கோவை மாநகர காவல் துணை ஆணையராக (வடக்கு) நியமிக்கப்பட்டுள்ளார்.

சசிமோகன் கோவை சரக டி.ஐ.ஜி-ஆக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe