புல்லுக்காடு பகுதியில் நவீன மீன் அங்காடி திறந்து வைக்கப்பட்டது...

published 1 day ago

புல்லுக்காடு பகுதியில் நவீன மீன் அங்காடி திறந்து வைக்கப்பட்டது...

கோவை: கோவை புல்லுக்காடு பகுதியில் சுமார் ஒன்றரை ஏக்கரில் 8 கோடி ரூபாய் மதிப்பில் கோவை மாவட்ட சில்லறை மீன் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில்  கட்டப்பட்ட  நவீன மீன் அங்காடியை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார். இந்த அங்காடியில் 72 கடைகள் உள்ளன. இந்த கட்டிடத்தின் முன்புறம் நான்கைந்து படகுகள் நிற்பது போன்ற வடிவில் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி,  மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மேயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் சிறப்புரையாற்றிய அமைச்சர் செந்தில் பாலாஜி, இந்த நவீன மீன் அங்காடி அமைவதற்கு பாடுபட்ட வியாபாரிகள் சங்கத்தினர் அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார். இவர்களின் நீண்ட நாள் கோரிக்கை முயற்சி வெற்றிகரமாக  திறப்பு விழா கண்டுள்ளது என்றார்.

பார்க்கிங், தெருவிளக்கு கோரிக்கையை நாங்களே முன்பே முடிவு செய்து விட்டோம் என்று கூறிய அவர் இங்கு பார்க்கிங் கல் அமைத்து , மின் விளக்குகள் அமைத்து தரப்படும் என்றார். மீன் வியாபாரிகள் மட்டுமின்றி நகை வியாபாரிகளின் கோரிக்கைகளும் நிறைவேற்றி கொடுக்கும் ஆட்சி இது என்றும் ஹாக்கி மைதானம் விரைவில் பணிகள் தொடங்க உள்ளது என தெரிவித்தார்.

கோவையில் 415 கோடி தார் சாலைகள் கோவையில் அமைத்து முடிக்கப்பட்டுள்ளதாகவும், கூடுதலாக 200 கோடி ஒதுக்கப்பட்டு தமிழ்நாட்டில் கோவை மாநகராட்சி மட்டும் 615 கோடி தார் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என கூறினார். இது மக்களுக்கான ஆட்சி என்றும் 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் உழைக்கும் முதலமைச்சரை நாம் பெற்று உள்ளோம் எனவும் இனிமேலும் எந்த கோரிக்கைகள் என்றாலும் அது நிறைவேற்றி தரப்படும் என கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe