கோவை கலெக்டர் அலுவலகம் அருகே பரபரப்பு ஓடும் பஸ்சிலிருந்து கீழே குதித்த பெண் படுகாயம்- சிசிடிவி காட்சிகள் உள்ளே…

published 1 week ago

கோவை கலெக்டர் அலுவலகம் அருகே பரபரப்பு ஓடும் பஸ்சிலிருந்து கீழே குதித்த பெண் படுகாயம்- சிசிடிவி காட்சிகள் உள்ளே…

கோவை: கேரள மாநிலம் அட்டப்பாடியை சேர்ந்தவர் மருதன் மனைவி மஞ்சு (38). இவரது குழந்தைக்கு பிறந்தநாள் சான்றிதழ் பெற கோவை தெற்கு ஆர்.டி.ஓ. அலுலகத்தில் விண்ணப்பித்து இருந்தனர். 

இந்த சான்றிதழ் வாங்குவதற்காக மருதன் மற்றும் மஞ்சு நேற்று காலை அட்டப்பாடியில் இருந்து கோவை வந்தனர். பின்னர் வேறொரு பஸ் மூலம் கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பஸ் கலெக்டர் அலுவலகம் வருவதற்கு முன்பே மஞ்சு எழுந்து படிக்கட்டுக்கு வந்தார். பஸ்  கலெக்டர் அலுவலக புதிய நுழைவு வாயில் அருகே வந்தபோது திடீரென்று ஓடும் பஸ்சில் இருந்து அவர் கீழே குதித்தார். 
 

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் மற்றும் அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

இதற்கிடையே, மஞ்சு பஸ்சில் இருந்து கீழே குதித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது. மஞ்சு தற்கொலை எண்ணத்தில் பஸ்சில் இருந்து குதித்தாரா?அல்லது தவறி விழுந்தாரா? என்பது தெரியவில்லை. இது குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிசிடிவி காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://www.instagram.com/reel/DGiBexLv2Eq/?igsh=aTY2bmdsbTdwM2Zp
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe