மலுமிச்சம்பட்டி அருகே சாலையின் குறுக்கே கவிழ்ந்த கான்கிரீட் லாரி- பெண்ணுக்கு பலத்த காயம்...

published 1 week ago

மலுமிச்சம்பட்டி அருகே சாலையின் குறுக்கே கவிழ்ந்த கான்கிரீட் லாரி- பெண்ணுக்கு பலத்த காயம்...

கோவை: கோவை, சிங்காநல்லூர், வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சிவன். அவரது மனைவி ரேணுகா நேற்று மாலை பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டு இருந்தனர். 

அப்பொழுது மலுமிச்சம்பட்டி அடுத்து வரும் போது சாலையில் குறுக்கே சென்றதாக தெரிகிறது. அப்பொழுது பின்னால் வந்த கான்கிரீட் கலவை இயந்திர லாரியின் ஓட்டுநர் இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்து உள்ளார். 

அப்பொழுது நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தின் மீது மோது கீழே லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட உள்ளது. இதில் படுகாயம் அடைந்த இருசக்கர வாகனத்தில் வந்த ரேணுகா மற்றும் அவரது கணவர் சிவன் ஆகியோரை அக்கம், பக்கத்தினர் மீட்பு சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு ரேணுகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  இந்த விபத்து குறித்து செட்டிபாளையம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe