பல்லடத்தில் தனி மனிதனாக  உண்ணாவிரதப்‌ போராட்டத்‌தில் ஈடுபடும் விவசாயி

published 2 years ago

பல்லடத்தில் தனி மனிதனாக  உண்ணாவிரதப்‌ போராட்டத்‌தில் ஈடுபடும் விவசாயி

கோவை: கல்குவாரியை எதிர்த்து பல்லடம் கோடாங்கிபாளையத்தில் விவசாயி தனி மனிதனாக உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கியுள்ளார்.

கோடாங்கிபாளையத்தை சேர்ந்தவர் விவசாயி விஜயகுமார். திருப்பூர் மாவட்டம்‌, பல்லடம்‌ வட்டம்‌, கோடாங்கிபாளையத்தில்‌ இயங்கி வரும் கல்குவாரிக்கு புதிதாக உரிமம்‌ வழங்கியதைக் கண்டித்தும், முறைகேட்டைக்‌ கண்டறிய சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டியும்‌, தற்பொழுது வழங்கிய கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டியும் வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கல்குவாரியால் குடும்பத்துடன்‌ இப்பகுதியில்‌ வாழ முடியவில்லை என்றும், விவசாயமும்‌ செய்ய முடியாத சூழல்‌ இருப்பதாகவும் தெரிவிக்கும் இவர் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்யும் வரை தொடர் உண்ணாவிரதப்‌ போராட்டத்‌தில் ஈடுபட்டு வருகிறார். 

போராட்டம் நடைபெறும் இடம் :
https://www.google.com/maps?q=11.0338923,77.2091368 

கோவை மக்களே வீக் எண்ட்-டை எஞ்ஜாய் பண்ண ரெடி ஆகிடுங்க...!!!

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe