கோவையில் துவங்கிய மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி...

published 3 days ago

கோவையில் துவங்கிய மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி...

கோவை: கோவையில் மாநில அளவில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில்  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த 41 அணிகள் பங்கேற்று உள்ளனர்.

தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் ஆகியோர் சார்பில் 16 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான மாநில அளவிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி துவங்கியது. 


கோவை நேரு விளையாட்டு அரங்கத்தில் தொடங்கிய இந்த போட்டியில் கோவை திருநெல்வேலி நீலகிரி பெரம்பலூர் ஈரோடு சேலம், திண்டுக்கல் தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்ககளை சேர்ந்த  41 அணிகள் கலந்து கொண்டுள்ளனர். இன்று துவங்கிய இந்த போட்டி வரும் 2 ஆம் தேதி வரை என 5 நாட்கள் நடைபெறுகிறது.

இப்போட்டிகள் முதல் மூன்று நாட்களுக்கு லீக் போட்டியாகவும் கடைசி இரண்டு நாட்கள் நாக் அவுட் போட்டிகளாக நடைபெறுகிறது.
இப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு கோப்பை வழங்கப்படுவதுடன் 12 மாணவர்கள் தமிழ்நாடு மாநில அளவிலான அணிக்கு விளையாட தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் வரும் ஏப்ரல் 8 - ம் தேதி முதல் 15-ம் தேதி வரை பாண்டிச்சேரியில் நடைபெறும் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் கலந்து கொள்வார்கள் என போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe