மாணவர்களை ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கமிட வலியுறுத்திய ஆளுநர்- கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்...

published 1 day ago

மாணவர்களை ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கமிட வலியுறுத்திய ஆளுநர்- கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்...

கோவை: மதுரையில் உள்ள பொறியியல் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கல்லூரி மாணவர்களை ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கமிடுமாறு கேட்டுக் கொண்டார். அச்சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை நீதிமன்ற வளாகம் முன்பு அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தினர் ஆளுநரின் செயல்பாட்டை கண்டித்து  ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். இதில் சுமார் 30க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு தமிழக ஆளுநரை கண்டித்து பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். 

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வக்ஃபு திருத்த சட்ட மசோதாவை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தமிழக ஆளுநரின் இந்த செயல், மாணவர்கள் மத்தியில் மதவெறி உணர்வை தூண்டும் வகையில் இருப்பதாகவும், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாகவும் வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe