ரீல்ஸ் மோகம்- உணர்ந்து செயல்பட வேண்டுமென கோவை போலிஸ் கமிஷனர் அறிவுரை...

published 1 day ago

ரீல்ஸ் மோகம்- உணர்ந்து செயல்பட வேண்டுமென கோவை போலிஸ் கமிஷனர் அறிவுரை...

கோவை: கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் திறந்த வெளி காத்திருப்போர் இடத்தை மாநகர காவல் ஆணையாளர் சரவணசுந்தர் திறந்து வைத்தார். மேலும் இந்த இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தமிழக அரசு திட்டமான இலவச WiFi வசதியையும் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநகர காவல் ஆணையாளர் இங்கு புகார் அளிக்க வரும் பொது மக்களுக்காக காத்திருப்போர் இடம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

அதுமட்டுமின்றி தமிழக அரசின் திட்டமான இலவச WiFi வசதியும் அறிமுகப்படுத்தியிருப்பதாகவும் இணைய வழியாக புகார் அளிப்பதற்கு இதனை பயன்படுத்தலாம் என்றும் இது அரசு திட்டம் என்பதால் தைரியமாக இதனை பயன்படுத்தலாம் என தெரிவித்தார்.

இந்துஸ்தான் கல்லூரி மாணவி தற்கொலை குறித்து DC தலைமையில் முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் மத போதகர் ஜான் ஜெபராஜ் வழக்கில் சிறுமி அளித்த புகாரின் பேரில் 164 பிரிவின் கீழ்  மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வேறு யாரும் இந்த வழக்கில் இல்லை என தெரிவித்தார்.

காவல் நிலையங்களில் இளைஞர்கள் ரீல்ஸ் எடுப்பது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர் பொதுமக்களும் இளைஞர்களும் ரீல்ஸ் மோகத்தில் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe