கோவையில் போலிஸ் விசாரணைக்கு வந்த இடத்தில் ரீலிஸ் எடுத்த இளைஞர்கள்- காவல்துறை எடுத்த நடவடிக்கை...

published 1 day ago

கோவையில் போலிஸ் விசாரணைக்கு வந்த இடத்தில் ரீலிஸ் எடுத்த இளைஞர்கள்- காவல்துறை எடுத்த நடவடிக்கை...

கோவை: காவல் நிலையத்தில் 
ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட  இளைஞர்கள்-  பைக்குகளை  பறிமுதல் செய்த நிலையில் மன்னிப்பு கேட்கும் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில்  3 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தை அதி வேகமாக இயக்கி செல்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து ரோந்து போலீசாரும் கருமத்தம்பட்டி காவல் துறையினரும் அந்த 3 இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் அபராதம் விதித்ததுடன் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இருப்பினும் அந்த  இளைஞர்கள் காவல் நிலையத்திகு வெளியே வந்து மீண்டும் ரிலீஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அதனை பார்த்த கருமத்தம்பட்டி காவல்துறையினர் மீண்டும் அந்த இளைஞர்கள் மூன்று பேரையும் அழைத்து வழக்கு பதிவு செய்து, இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து 3 இளைஞர்களும் காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில்
தற்போது இளைஞர்கள் மூன்று பேரும் அவர்கள் செய்த செயலுக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/6dJiruk6opk

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe