கோவை பேருந்துகளில் ஏர் ஹாரன்- பறிமுதல் செய்து அபராதம் விதித்த அதிகாரிகள்...

published 2 days ago

கோவை பேருந்துகளில் ஏர் ஹாரன்- பறிமுதல் செய்து அபராதம் விதித்த அதிகாரிகள்...

கோவை: கோவையில் அதிக ஒலி எழுப்பி கூடிய ஏர் ஹார்ன் பொருத்தப்பட்ட தனியார் மற்றும் அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து வட்டார அதிகாரிகள் அபராதம் விதித்தனர்

கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையத்தில் அரசு மற்றும் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில்  அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹார்ன் பொருத்தப்பட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பேருந்துகளை இயக்கியதால் தொடர்ந்து பொதுமக்கள் புகார் அளித்து வந்தனர்.

இந்நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.அதில் 90 டெசிபல்-க்கு அதிகமாக ஒலி எழுப்பும் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.மேலும் பொருத்தப்பட்ட ஏர் ஹாரனை
அகற்றப்படுத்தினர்.

வாகனங்களில் ஏர் ஹார்ன் தொடர்ந்து பயன்பட்டு வருவதாக எழுந்த புகார்களின் அடிப்படையிலும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்,காவல்துறை அதிகாரிகள் போக்குவரத்து துறை அதிகாரிகள் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஏர் ஹாரன் பொருத்திய வாகனங்கள் குறித்து ஆய்வு செய்ததாகவும்  ஒலி எழுப்பான்களில் டிசெபல் அதிகமாக இருந்த காரணத்தினால் அபராதம் விதிக்கப்பட்டது.இந்த அபராத தொகையானது 3000 ரூபாயில் இருந்து 10,000 ரூபாய் வரை விதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe