விசைத்தறிக்கூடங்களுக்கு சோலார் பேனல் அமைக்க மானியம் வழங்க வேண்டும்- கோவையில் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல்…

published 1 day ago

விசைத்தறிக்கூடங்களுக்கு சோலார் பேனல் அமைக்க மானியம் வழங்க வேண்டும்- கோவையில் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல்…

கோவை: விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில்  காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உண்ணாவிரத பந்தலுக்கு நேரில் சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதுதொடர்பாக அதிமுக சார்பில் சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்ததாகவும், ஆனால் ஒரு மாதமாக போராட்டம் நீடித்து வரும் நிலையில், ஜவுளி உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு எட்டுவதற்கு தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

மேலும், மின் கட்டண உயர்வு மற்றும் உதிரிபாக விலை உயர்வை சமாளிக்க, விசைத்தறிக்கூடங்களுக்கு மானிய விலையில் சோலார் பேனல் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதை திமுக அரசு செய்யத் தவறினால், 2026-ல் ஆட்சிக்கு வரும் அதிமுக அரசு இந்தக் கோரிக்கையை கட்டாயம் நிறைவேற்றும் என்று உறுதியளித்தார்.

விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்கு அதிமுக முழு ஆதரவு அளிக்கும் என்றும் வேலுமணி தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe