பாஜகவுடன் சேர்ந்து அதிமுக செய்த துரோகம்- கோவையில் நோட்டீஸ் விநியோகம் செய்த திமுக...

published 1 day ago

பாஜகவுடன் சேர்ந்து அதிமுக செய்த துரோகம்- கோவையில் நோட்டீஸ் விநியோகம் செய்த திமுக...

கோவை: பாஜகவுடன் சேர்ந்து அதிமுக தமிழ்நாட்டிற்கு செய்த துரோக பட்டியல் என குறிபிட்டு திமுக ஐடி விங் சார்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன...

கோவை காந்திபுரம் பகுதியில் திமுக ஐடி விங் சார்பில் "வஞ்சக பாஜகவுடன் சேர்ந்து அடிமை அதிமுக தமிழ்நாட்டுக்கு செய்த துரோகம் பட்டியல்!" என்ற தலைப்பில் பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யபட்டன.

அந்த துண்டு பிரசுரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடியின் புகைப்படத்தை குறிபிட்டு "நீட் தேர்வை தமிழ்நாட்டில் அனுமதித்து மாணவ மாணவியரின் உயிரைப் பறித்தது, மின்சார கட்டண உயர்வுக்கு காரணமான உதய் மின் திட்டத்திற்கு ஆதரவு, நானும் விவசாயி என்று வேடம் போட்டு மூன்று வேளாண் சட்டத்திற்கு ஆதரவு, இஸ்லாமியர்களை இரண்டாம் தரவ குடிமக்களாக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு, சிறுபான்மை மக்களுக்கு எதிரான CAA சட்டத்திற்கு ஆதரவு" என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் பல்வேறு பாதகங்களுக்கு துணைபோன பழனிச்சாமி,  இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், கல்வி நிதி மறுப்பு, தொகுதி மறு சீரமைப்பு என பாஜக அரசின் அனைத்து துரோகங்களுக்கும் துணை நின்று கூட்டணி அமைத்துள்ள அதிமுக முத்திரையை கிழித்து விரட்டி அடிப்போம் என்ற வாசகங்களுடன்  பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

மேலும் இந்த பிரசுரத்தில் வஞ்சக பாஜக- துரோக அதிமுக கூட்டணியிடமிருந்து தமிழ்நாட்டைப் பாதுகாப்போம்! #NEETதுரோகிADMK என குறிப்பிடப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe