பொதுக்கூட்டம்; நீலாம்பூரில் முழங்கிய தி.மு.க., நிர்வாகிகள்!

published 1 day ago

பொதுக்கூட்டம்; நீலாம்பூரில் முழங்கிய தி.மு.க., நிர்வாகிகள்!

கோவை: கோவையில் தி.மு.க., அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தி.மு.க., அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் கோவை மாவட்டம் சூலூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட நீலாம்பூர் ஊராட்சியில் தி.மு.க., தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட நிர்வாகிகள், கடந்த 4 ஆண்டுகளில் தி.மு.க., அரசு தமிழகத்திற்கும், கோவைக்கும் கொண்டு வந்த திட்டங்கள் தொடர்பாக நிர்வாகிகள் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினர்.

சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பரசு முன்னிலையில் நடைபெற்ற இந்த சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில், சூலூர் வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் நீலாம்பூர் சீனிவாசன், கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் கரூர் முரளி மற்றும் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe