கோவை பெண் பட்டயக் கணக்காளர்களுக்கு பாராட்டு விழா

published 18 hours ago

கோவை பெண் பட்டயக் கணக்காளர்களுக்கு பாராட்டு விழா

கோவை: இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் கோவை கிளையில், மூத்த பெண் பட்டயக் கணக்காளர்களுக்கு பாராட்டு விழா இன்று நடைபெற்றது.

இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் (ICAI) கோவை கிளையின் சார்பில், மூத்த பெண் பட்டயக் கணக்காளர்களுக்கு சிறப்பு பாராட்டு விழா நடைபெற்றது.

பத்தாண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்தும், நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளை வகிப்பவர்களாகவும், சொந்தமாக தங்கள் தணிக்கையாட்சிகளை நடத்துபவர்களாகவும் இருக்கும் பெண் பட்டயக் கணக்காளர்களுக்கு இந்த விழா அர்ப்பணிக்கப்பட்டது.

விழாவுக்கு தொடக்கமாக, ஐசிஏஐ கோவை கிளைத் தலைவர் சிஏ. ஆர். சதீஷ் வரவேற்புரை ஆற்றினார். தணிக்கைத் துறையில் பெண்கள் காட்டும் உற்சாகமும், நேர்த்தியும் பாராட்டப்பட வேண்டியவை என்றும், அவர்கள் நிச்சயமாக இந்தத் துறையில் முன்னேறிச் செல்லக்கூடிய திறமைமிக்கவர்களாக இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

கோவை மாநகர மேயர் ரங்கநாயகி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்தார். தணிக்கைத் துறையில் பெண்களின் பங்களிப்பு குறித்து பேசிய அவர், தொழில்நுட்ப மாற்றங்களை பெண் பட்டயக் கணக்காளர்கள் தங்கள் தொழில்முறை வளர்ச்சிக்காக உள்வாங்கி, நாட்டின் பொருளாதார மேம்பாட்டில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஐசிஏஐ முன்னாள் அகில இந்திய தலைவர் சிஏ. ஜி. ராமசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். பெண்களுக்கு ஐசிஏஐ வழங்கும் பல்வேறு முன்னுரிமைகள் மற்றும் வளர்ச்சி திட்டங்களைப் பற்றி அவர் விளக்கினார். தற்போது 1.25 லட்சத்திற்கும் அதிகமான பெண் உறுப்பினர்களும், 5 லட்சத்திற்கும் அதிகமான பெண் மாணவிகளும் ஐசிஏஐயில் உள்ளனர் என்றும், இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே போவதாகவும் தெரிவித்தார்.

தென்மண்டல குழு உறுப்பினரும், கோவை கிளையின் கௌரவ உறுப்பினருமான சிஏ. எஸ். ராஜேஷ் பேசியபோது, கிராமப்புற மாணவிகள் பட்டயக் கணக்காளர் துறையில் அதிகமாக சேர்ந்துவருவது ஒரு பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், எதிர்காலத்தில் பெண் பட்டயக் கணக்காளர்கள் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர் என நம்பிக்கையுடன் கூறினார்.

இந்த விழாவை கோவை கிளையின் மகளிர் எழுச்சி குழு ஏற்பாடு செய்தது. இந்த குழுவின் தலைவரும், கிளையின் பொருளாளருமான சிஏ. பி.என். லட்சுமி அவர்கள் விழாவுக்கான ஒருங்கிணைப்பை மிகச் சிறப்பாகச் செய்ததற்காக அனைவராலும் பாராட்டப்பட்டார்.

விழா இறுதியில், கிளைச் செயலாளர் சிஏ. எம். தங்கவேல் நன்றி உரையாற்றினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe