குடியரசுத் துணைத் தலைவர் கோவை வந்தடைந்தார்...

published 1 day ago

குடியரசுத் துணைத் தலைவர் கோவை வந்தடைந்தார்...

கோவை:நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டு துவக்க விழா மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் இன்று தமிழகம் வந்துள்ளார்.

டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் காலை 10.40 மணியளவில் கோயம்புத்தூர் விமான நிலையம் வந்தடைந்த குடியரசுத் துணைத் தலைவரை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாநகர காவல் ஆணையாளர் சரவணன் சுந்தர் ஆகியோர் வரவேற்றனர்.

இதனையடுத்து, தனி ஹெலிகாப்டர் மூலம் குடியரசுத் துணைத் தலைவர் உதகைக்கு புறப்பட்டார்.

இன்றும், நாளையும் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலை கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் குடியரசுத் துணைத் தலைவர், அன்றைய தினமே டெல்லி புறப்படுகிறார்.

குடியரசுத் துணைத் தலைவர் வருகையையொட்டி கோவை மற்றும்
நீலகிரி மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe