கோவையில் கந்துவட்டியால் விஷம் அருந்திய நபர்- பாதுகாப்பு கேட்டு காவல் கண்காணிப்பாளரிடம் மனு...

published 19 hours ago

கோவையில் கந்துவட்டியால் விஷம் அருந்திய நபர்- பாதுகாப்பு கேட்டு காவல் கண்காணிப்பாளரிடம் மனு...

கோவை: கோவை பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அம்பராம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சஞ்ஜித்குமார். இவருக்கு திருமணமாமி பள்ளிக்கு செல்லும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.  சஞ்சித்குமார் கட்டிட வேலை(மேசன்) செய்து வருகிறார்.

இந்நிலையில் தொழிலுக்காக கடந்த ஆண்டு இவரது ஊரை சேர்ந்த பிரசாத்பிரபு என்வரிடம் 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். அந்த கடனுக்கு மாதம் வட்டியாக 20 ஆயிரம் கொடுக்க வேண்டும் என கூறி பிரசாத் முத்திரைத்தாளில் கையொப்பம் பெற்றுள்ளார்.

முதலில் சஞ்சித் சரியாக வட்டி கட்டி வந்த நிலையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தினாலும் அவரது மனைவிக்கு ஏற்பட்ட மருத்துவ செலவுகளினாலும் வட்டி கட்ட முடியாமல் போயுள்ளது. இதனையடுத்து பிரசாத் வட்டி பணத்தைக் கேட்டு பிரசாத் மிரட்டியதாக கூறப்படுகிறது. 

அதன் காரணமாக சஞ்சித் காளிமுத்து என்பவரிடம் 45 ஆயிரம் ரூபாய் கந்து வட்டிக்கு பணம் வாங்கி பிரசாத்க்கு கொடுத்துள்ளார். காளிமுத்துவிடம் வாங்கிய கந்துவட்டிக்கும் வாரம் 4500 ரூபாய் வட்டியாக சஞ்சித் செலுத்தி வந்த சூழலில் எட்டு வாரங்கள் கழித்து குடும்ப சூழல் காரணமாக வட்டி கட்ட முடியாமல் போனதாக தெரிகிறது.

இதனை அடுத்து பிரசாத் கடுமையான வார்த்தைகளால் சஞ்சித்தையும் அவரது குடும்பத்தினரையும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அவர் மூன்று தினங்களுக்கு முன்பு சானிப்பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தற்பொழுது ஓரளவு உடல் நிலை தேறிய சஞ்சித் தான் கடன் பெற்ற பிரசாத், காளிமுத்து மற்றும் அவரது கூட்டாளிகள் தன்னைக் கொன்று விடுவார்கள் என்றும் அவர்களால் தன்னுடைய குடும்பத்தினரின்  உயிருக்கு ஆபத்துள்ளதாக கூறி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

தான் வாங்கிய கடனுக்கு அதிகமாகவே வட்டி கட்டி இருப்பதாகவும் இருப்பினும் அசல் தொகையை செலுத்த வேண்டும் என்று அவர்கள் தொல்லை செய்வதாகவும் குடும்பத்தினரையும் மிரட்டுவதாகவும் கொலை மிரட்டல் விடுவதாகவும் தெரிவித்துள்ள சஞ்சய் தங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe