கோவையில் சர்வதேச ஹாக்கி மைதானம்- அடிக்கல் நாட்டிய துணை முதல்வர்...

published 3 days ago

கோவையில் சர்வதேச ஹாக்கி மைதானம்- அடிக்கல் நாட்டிய துணை முதல்வர்...

கோவை: கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் மாநகராட்சி நிதியின் கீழ் 10 கோடி மதிப்பில் சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானம் அமைய உள்ளது. அதில் டர்ப் தளம், உயர் மின் கோபுர விளக்குகள், சுற்றுச்சுவர், கழிவறைகள், விளையாட்டு வீரர்களுக்கான உடை மாற்று அறை ஆகியவை அமைக்கப்பட உள்ளது.


இதற்கான அடிக்கல் நாட்டுவிழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். 
தொடர்ந்து 29 கோடியே 99 லட்சத்தில் முடிவுற்ற 64 திட்டங்களின் தொடக்க விழா, 82 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பில் 132 புதிய திட்டங்களுக்கான தொடக்க விழா மற்றும் 239 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பில் 25 ஆயிரத்து 24 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிகழ்வில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி கயல்விழி செல்வராஜ் கோவை மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையாளர் மேயர் கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் விழா பேருரை ஆற்றிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கோவைக்கு எப்போது வந்தாலும் புத்துணர்ச்சி கிடைக்கிறது.
திராவிட மாடல் அரசு என்றால் எல்லோருக்கும் எல்லாம் என்று அர்த்தம் என்றும் இந்த அரசுக்கு பக்க பலமாய் உள்ள தாய்மார்கள் இங்கு அதிகளவு வந்துள்ளீர்கள்
மகளிருக்கான திட்டங்கள் வரவேற்பு பெற்றுள்ளது என தெரிவித்தார்.

விடியல் பயணம், புதுமைப்பெண், காலை உணவு திட்டம், மகளிர் உரிமை தொகை ஆகியவை பெரும் வரவேற்பு பெற்றுள்ளது
மகளிர் உரிமை தொகைக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம் என கூறிய அவர் இதை எல்லாம் நாங்கள் கடன் தொகையாக பார்க்கவில்லை நம்பிக்கை தொகையாக தான் பார்க்கிறோம் என்றார். மகளிருக்கான திட்டங்களால் நாட்டில் வேலைக்கு செல்லும் பெண்களில் 43% தமிழ்நாடு பெற்றுள்ளது என்றும் 13,000 மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் வேலை கிடைத்துள்ளதாகவும் கூறினார்.

இந்த அரசு என்றைக்கும் மக்களுக்கு பக்கபலமாக இருக்கும் என்றும் நீங்களும் இந்த அரசுக்கு பக்கபலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe