தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு- தீர்ப்பு தேதி அறிவிப்பு...

published 2 days ago

தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு- தீர்ப்பு தேதி அறிவிப்பு...

கோவை: தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

கடந்த 2019 ம் ஆண்டு பொள்ளாச்சியில் பல பெண்களைக் குறி வைத்து பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டிய கும்பலின் கொடூரத்தனம் அம்பலமானது. மேலும், பாதிக்கப்பட்ட பெண் கெஞ்சுவதான வீடியோ காட்சியும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சமூகத்தை பதற வைத்தது.

நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில், சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், ஹேரன்பால், பாபு மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது.

9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் சிறப்பு வழக்காக நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நிலையில், கோவை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முழுவதும் வீடியோ கான்பரன்சிங் முறையில் நடத்தப்பட்டு வந்தது. விசாரணையில் ஆஜராகும் சாட்சிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைவரும் மூடப்பட்ட நீதிமன்ற அறைகளில் விசாரணையில் பங்கெடுத்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சி விசாரணை முடிந்த நிலையில், இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கேள்விகள் கேட்பதற்காக, 9 பேரும் மகளிர் நீதிமன்றத்தில் கடந்த (ஏப்ரல் 5) ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியங்கள் முடிவடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டு உள்ளவர்களிடம் விசாரணை நடைபெற்றது. இதில் குற்றம்சாட்டப்பட்ட ஒவ்வொரு நபரிடமும் சுமார் 50 கேள்விகள் வரை கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சாட்சி விசாரணைகள் முடிவடைந்த நிலையில் விரைவில் இந்த வழக்கில் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வருகின்ற மே 13ஆம் தேதி தீர்ப்பு வெளியாகும் என கோவை மகளிர் நீதிமன்றம் அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe