கோவையில் துவங்கிய ஜல்லிக்கட்டு- சீறிபாயும் காளைகள்...

published 3 days ago

கோவையில் துவங்கிய ஜல்லிக்கட்டு- சீறிபாயும் காளைகள்...

கோவை: கோவையில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார்.

 

கோவை செட்டிபாளையம் பைபாஸ் சாலையில் தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் கோவை மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுகிறது.  இந்த போட்டியில் 800 காளைகள் அவிழ்த்து விட திட்டமிடப்பட்டுள்ளது மேலும் 500 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
 

இந்த போட்டியை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார்.  முன்னதாக கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்கு பொதுமக்களுக்கு பார்வைத்திடல் வசதியும் குடிநீர் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாடுபிடி வீரர்களுக்கோ, மாடுகளுக்கோ காயம் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கு பொது மருத்துவக் குழுவினர்களும், கால்நடை மருத்துவக்குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். மேலும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியை கோவை மாநகராட்சி ஆணையாளர், கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், கோவை மாநகராட்சி மேயர், ஆகியோர் கலந்து கொண்டு பார்வையிட்டு வருகின்றனர். போட்டியில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கும் மாட்டின் உரிமையாளர்களுக்கும் நான்கு சக்கர வாகனங்களும் 2 சக்கர வாகனங்கள் பரிசாக அளிக்கப்பட உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe