அதிமுக பதவி வெறியால் சிக்கித் தவிக்கிறது - கோவையில் டிடிவி தினகரன் பேச்சு

published 2 years ago

அதிமுக பதவி வெறியால் சிக்கித் தவிக்கிறது - கோவையில் டிடிவி தினகரன் பேச்சு

கோவை: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கட்டி காப்பாற்றிய கட்சி ஒரு சிலரின் ஆணவம் மற்றும் பதவி வெறியால் சிக்கித் தவிப்பதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

அறிஞர் அண்ணாவின் 114 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோவை அண்ணா சாலையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

அண்ணாவின் 114வது பிறந்தநாளை  முன்னிட்டு அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து வீர அஞ்சலி செலுத்தி இருக்கின்றோம். மேலும் இன்னொரு கட்சியில் (அதிமுக) நடக்கும்  கூத்தைப்  பற்றிப் பதில்சொல்ல வேண்டியதில்லை.

அது  நீதிமன்றத்தில் போராடிக் கொண்டு இருக்கின்றது. தமிழக மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா  கட்டிக்காத்த இயக்கம் ஒரு சிலரின்  ஆணவத்தால், பதவி வெறியால், சுயநலத்தால் சிக்கித் தவிக்கிறது. இதற்குக்  காலம் பதில் சொல்லும் எல்லாம் சரியாகிவிடும்.

தேர்தல் நேரத்தில் கொடுத்த  வாக்குறுதிகளை  திமுக  நிறைவேற்ற வில்லை. திராவிட மாடல் எனக் கூறிக்கொண்டு வரிசுமையை ஏற்றி மக்களைத் துன்புறுத்துகிறது. இதற்கு  நாடாளுமன்றத்   தேர்தலில் மக்கள் பதில் சொல்வார்கள்.  

எந்த மொழியையும், எந்த மாநிலத்திலும் திணிக்கக் கூடாது. தமிழகத்தைப் பொறுத்த வரை மக்கள் திணித்தால்  ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். கொரொனா பாதிப்பால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி வரியைக் குறைக்க வேண்டும். கடந்த திமுக ஆட்சியில்  மின்வெட்டால் பாதிக்கப்பட்டனர். இந்த திமுக ஆட்சியில் மின்கட்டண உயர்வால் தொழில் துறை பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe