கோவையில் மீண்டும் வருகிறது 'ஹேப்பி ஸ்ட்ரீட்'

published 2 years ago

கோவையில் மீண்டும் வருகிறது 'ஹேப்பி ஸ்ட்ரீட்'

கோவை: சில ஆண்டுகளுக்கு முன் கோவை ஆர். எஸ். புரத்தில் நடைபெற்றுவந்த 'ஹேப்பி ஸ்ட்ரீட்' மீண்டும் துவங்கப்படவுள்ளது கோவை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டில் தனியார் நாளிதழின் முயற்சியாக கோவை, மதுரை, சென்னை போன்ற நகரங்களில் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' என்ற முயற்சி துவங்கப்பட்டது. 

இந்த முயற்சியின் படி தனியார் நிறுவனத்துடன் மாவட்ட நிர்வாகங்கள், அரசுத் துறைகள் மற்றும்  காவல்துறையினர் இணைந்து ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சியை நடத்திவந்தனர்.

அதன்படி நகரின் குறிப்பிட்ட பகுதியில், ஞாயிற்றுக்கிழமையன்று காலை 6 மணி முதல் 9 மணி வரை ஒரு சாலையில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, அப்பகுதியில் பொது மக்கள் அவர்கள் விருப்பத்திற்கேற்ப நடனம் ஆடுவது, சைக்கிள் ஓட்டுவது, விளையாடுவது போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடுவர்.

நகரங்களில் காணப்படும் முக்கிய பிரச்சனைகளான போக்குவரத்து நெரிசல், பாதசாரிகளுக்கான நடக்க இடம் இல்லாமல் போவது, சைக்களுக்கான குறைவான மதிப்பு  மற்றும் காற்று மாசுபாடு போன்ற இன்னல்களைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடங்கப்பட்ட இம்முயற்சி கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டது.  

கொரோனா பெருந்தொற்றின் விளைவுகள் இப்போது குறைந்துள்ள நிலையில் வரும் ஞாயிறு முதல் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' மீண்டும் தொடங்கப்படும் என்று கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.

கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு குழந்தைகள் மற்றும் பெரியோர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் எங்கு?

கோவையில் ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள டி பி ரோட்டில், தலைமை தபால் அலுவலகம் முதல் மேக்ரிகார் சாலை வரையான பகுதியில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் 9 மணி வரை ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நமது கோவை மக்கள் அங்கு சென்றால் நிச்சயம் புதிய அனுபவம் கிடைக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe