ரொம்ப அழகா ரோடு போட்டிருக்கீங்களேம்மா..!

published 2 years ago

ரொம்ப அழகா ரோடு போட்டிருக்கீங்களேம்மா..!

கோவை: கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் தற்போது புதிதாக சாலை போடும் பணிகள் நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெற்று வருகின்றன. இரவு நேரங்களில் மட்டும் நடக்கும் இப்பணிகள் அதிகாலை வரை நடக்கிறது.

இதில் கவுண்டம்பாளையம் அருகே எருக் கம்பெனி பகுதியில் தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில் அப்பகுதியில் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த மின் மயான வண்டி மற்றும் ஆம்புலன்ஸ் வண்டிகளை அப்புறப்படுத்தாமல் சாலை போடும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

இதனால் அந்த வாகனம் நிற்கும் பகுதியில் சாலை வாகனங்களுக்குத் தகுந்தாற்போல் வளைந்து நெளிந்து போட்டுள்ளனர். சாலைப் பணிகளை மேற்கொள்ளும் முன் அந்த இடங்களில் ஏதேனும் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அகற்றிவிட்டு சாலைகளைப் போட்டால் பயனுள்ளதாக இருக்கும் என வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe