வரப் போகும் ஆஸ்திரேலியாவுடனான தொடரில் பும்ரா விளையாட இயலாது: பிசிசிஐ அதிகாரி

published 2 years ago

வரப் போகும் ஆஸ்திரேலியாவுடனான தொடரில் பும்ரா விளையாட இயலாது: பிசிசிஐ அதிகாரி

 

இந்தியாவின் டாப் பந்து வீச்சாளர்களுள் ஒருவரான ஜஸ்ப்ரீத் பும்ரா அடுத்த மாதம் நடக்கவிருக்கும் ஆஸ்திரேலியாவுடனான டி20 தொடரில் பங்கேற்க இயலாது என மூத்த பிசிசிஐ அதிகாரி கூறியுள்ளார்.

முதுகில் காயம் அடைந்த பும்ரா, புதன்கிழமை தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஓய்வெடுத்தார். அவரது முதுகில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், அக்டோபரில் நடைபெறவுள்ள அடுத்த போட்டியையும் அவர் இழக்க நேரிடும். பும்ராவிற்கு பதில் முகமது ஷமி அல்லது தீபக் சாஹர் அணியில் சேர்க்கப்படுவார்கள் எனக் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20-க்கு முன்னதாக, BCCI கூறியதாவது, "செவ்வாய்க்கிழமை இந்தியாவின் பயிற்சி அமர்வின் போது பும்ரா முதுகுவலியென்று கூறினார். அதை அடுத்து BCCI-யின் மருத்துவக் குழு அவரை பரிசோதித்து, ஸ்கேன் செய்து, அவர் குறைந்தபட்சம் 6 மாதங்கள் வரை ஓய்வெடுக்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளனர்.".

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளில் விளையாடிய பும்ரா, தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான 3வது போட்டியில் பங்கேற்பதற்காகத் திருவனந்தபுரம் சென்ற போதிலும் ஓய்வெடுக்கும் படி மருத்துவர்கள் கூறியதால் ஓய்விற்காகப் பெங்களூரிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாடமி-க்கு (NCA) சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

2022-ஆம் ஆண்டில் குறைவான போட்டிகளில் மட்டுமே பங்கேற்றுள்ள பும்ரா மீண்டும் ஓய்வெடுக்கச் சென்றுள்ளது அவரின் சக வீரர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe