கோவை வரும் முதல்வர்- முன்னேற்பாட்டு பணிகள் தீவிரம்...

published 4 days ago

கோவை வரும் முதல்வர்- முன்னேற்பாட்டு பணிகள் தீவிரம்...

கோவை: கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை கோவை வருவதையொட்டி அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இரண்டு நாள் சுற்று பயணமாக தமிழக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை கோவை வருகிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் முதலமைச்சர் நாளை விளாங்குறிச்சி பகுதியில் உள்ள புதிதாக கட்டப்பட்ட ஐடி பார்க் கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.

அதனை தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்க நகை தயாரிப்பு தொழில் குறித்தும் ,அதற்கு தீர்வு காணவும் சம்பந்தப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.இதனையடுத்து போத்தனூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

தொடர்ந்து நாளை மறுநாள் கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 45 ஏக்கரில் நடைபெற்று வரும் செம்மொழிப் பூங்கா பணிகளை ஆய்வு மேற்கொள்கிறார்.

இதனைத் தொடர்ந்து காந்திபுரம் சிறைச்சாலை வளாகத்தில் 6.9 ஏக்கரில் அமையவிருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா பங்கேற்று உரையாற்றுகிறார். 

இந்நிலையில்  முதலமைச்சர் நாளை கோவை வருவதையொட்டி அதற்கான முன்னேற்பாடுகள் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.அதேபோல பாதுகாப்பு பணிக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும் முதலமைச்சர் கலந்து கொள்ளும் விழா இடமான சிறைச்சாலை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்  பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe