கோவையில் பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம்...

published 3 days ago

கோவையில் பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம்...

கோவை: திமுக தேர்தல் வாக்குறுதி 181ன் படி பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, பகுதிநேர ஆசிரியர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கடந்த 2011-12 கல்வியாண்டு முதல் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 12000 பகுதி நேர ஆசிரியர்கள் (கோவையில் 384 பகுதி நேர ஆசிரியர்கள்) 12,500 ஊதியத்திற்கு பணியாற்றி வருவதாகவும் குடும்ப வாழ்வாதாரத்திற்காக பணி நிரந்தர கோரிக்கை வைத்து வருவதாகவும் கூறும் பகுதிநேர ஆசிரியர்கள், அரசின் கவனத்தை பெறும் வகையில், ஆர்ப்பாட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க உள்ளதாக கூறினர்.

மேலும், கோரிக்கை நிறைவேறாமல் இருக்கும் பட்சத்தில், 12000 பகுதிநேர ஆசிரியர்களும் சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டம் செய்து அரசின் கவனத்தை பெற்று பணி நிரந்தர கோரிக்கையினை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe