கழிவைக் கொட்டும் வாகனத்தைப் பிடித்துக் கொடுத்தால் 1000 பரிசு: கிராம சபைக் கூட்டத்தில் அறிவிப்பு

published 2 years ago

கழிவைக் கொட்டும் வாகனத்தைப் பிடித்துக் கொடுத்தால் 1000 பரிசு: கிராம சபைக் கூட்டத்தில் அறிவிப்பு

 

கோவை: மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 17 ஊராட்சிகளில் நேற்று காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றது.

இதையொட்டி மேட்டுப்பாளையம் அருகே பெள்ளேபாளையம் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில் ஊராட்சி தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபால் முன்னிலை வகித்தார். "கூட்டத்தில் ஊராட்சிக்குட்பட்டப் பகுதிகளில் கோழி கழிவுகளைக் குடியிருப்பு, சாலையோரத்தில் கொட்டும் வாகனங்களைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தூய்மை பணியாளர்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் குப்பைகளை தரம் பிரித்து வாங்க வேண்டும். இதில் பிளாஸ்டிக் கழிவுகள் கிலோ ரூ. 8-க்கு விலை கொடுத்து ஊராட்சி நிர்வாகத்தால் வாங்கப்படும். அந்தத் தொகை தூய்மை பணியாளர்களுக்கு ஊதியமாக வழங்கப்படும்.

வேளாண்மைத் துறை அதிகாரிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதைகள் மலட்டுத் தன்மையாக உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டால் அதற்கு மாற்று வழி சொல்லத் தெரியாமல் களத்திற்கு வரும் வேளாண்மை அதிகாரிகள் தவிக்கின்றனர்.

நியாயவிலைக் கடைகளில் பணியாளர்கள் பொதுமக்களுக்குத் தரமான பொருட்களை வழங்க வேண்டும். இதோடு பொதுமக்கள் யாரும் நியாயவிலைக்கடை அரிசியை விற்பனை செய்யக் கூடாது." உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இதேபோல் சிக்காரம்பாளையம் ஊராட்சியில் தலைவர் ஞானசேகரன், இலுப்பநத்தத்தில் ரங்கசாமி, பெள்ளாதியில் சிவக்குமார் தலைமையில் கிராமசபைக் கூட்டம் நடந்தன.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe