கோவை இணைப் போக்குவரத்து ஆணையர் அலுவலக வாகனம்: பொது ஏலம் அறிவிப்பு

published 2 years ago

கோவை இணைப் போக்குவரத்து ஆணையர் அலுவலக வாகனம்: பொது ஏலம் அறிவிப்பு

 

கோவை: கோவை இணைப் போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் செயலாக்க பணிக்குப் பயன்படுத்தப்பட்ட டெம்போ டிராவலர் வாகனம் பொது ஏலம் விடப்படவுள்ளது.

இந்த ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் வரும் 28-ஆம் தேதி முதல் கோவை இணைப் போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் ரூ.500 செலுத்தி ஏலத்தில் பங்கேற்கபதர்கான விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் நவம்பர் 4-ஆம் தேதி மாலை 4 மணி வரை மட்டுமே வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பிணை முழுத்தொகை ரூ.10 ஆயிரம் வங்கி வரவோலையாக (DD) இணைத்து நவம்பர் 5-ஆம் தேதி மாலை 4 மணிக்குள் அலுவலகத்தில் நேரடியாகச் சமர்ப்பிக்கவேண்டும். நடப்பு ஜி.எஸ்.டி. கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள விண்ணப்பம் வழங்கப்படும் மற்றும் ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

நவம்பர் 9-ஆம் தேதி காலை பொது ஏலம் விடப்படும். இந்த தகவலைக் கோவை சரக இணைப் போக்குவரத்து ஆணையர் சிவகுமாரன் தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe