முதலமைச்சர் திட்டத்தில் எம். எல். ஏ. க்களின் கோரிக்கைகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்: ஆட்சியர் தகவல்

published 2 years ago

முதலமைச்சர் திட்டத்தில் எம். எல். ஏ. க்களின் கோரிக்கைகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்: ஆட்சியர் தகவல்

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒவ்வொரு தொகுதியிலும் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர்களால் வழங்கப்பட்ட மனுக்கள் குறித்து மாவட்ட அளவிலான குழுக்கூட்டம் ஆட்சியர் சமீரன் தலைமையில் நடைபெற்றது.

இதுகுறித்து ஆட்சியர் சமீரன் கூறியதாவது: 
"தமிழக முதலமைச்சர் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கியமான கோரிக்கைகளை முன்னுரிமைப்படுத்தி ஆட்சியருக்குப் பரிந்துரைப் பட்டியலை அனுப்பி வைக்குமாறு கடிதம் எழுதினார். அதனடிப்படையில் கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்குட்பட்ட 10 முக்கியத்‌ திட்டங்கள்‌ குறித்த பட்டியலை ஆட்சியரிடம் வழங்கினார்கள்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர்களால் வழங்கப்பட்ட மனுக்கள் குறித்து மாவட்ட அளவிலான குழுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் தேவைப்படும் திட்டங்கள், நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாமல் உள்ள முக்கியமான கோரிக்கைகள் மற்றும் பாலங்கள், சாலைப்பணிகள், உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவை குறித்து தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.

சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கிய முக்கியமான இத்திட்டங்களை அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டு நிதிகளைப் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது." இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். பி. வேலுமணி (தொண்டாமுத்தூர்), பொள்ளாச்சி ஜெயராமன் (பொள்ளாச்சி), ஏ. கே. செல்வராஜ் (மேட்டுப்பாளையம்), தாமோதரன் (கிணத்துக்கடவு), பி. ஆர். ஜி. அருண்குமார் (கவுண்டம்பாளையம்), வி. பி. கந்தசாமி (சூலூர்), கே. ஆர். ஜெயராமன் (சிங்காநல்லூர்), அம்மன் கே. அர்ச்சுணன் (கோவை வடக்கு), அமுல் கந்தசாமி (வால்பாறை), வானதி சீனிவாசன் (கோவை தெற்கு), மாநகராட்சி ஆணையர் பிரதாப், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் லீலாஅலெக்ஸ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe