அள்ளி கொஞ்சத் தூண்டும் குட்டி யானைப் புகைப்படங்கள் மற்றும் சுவாரசியமான தகவல்கள்...

published 2 years ago

அள்ளி கொஞ்சத் தூண்டும் குட்டி யானைப் புகைப்படங்கள் மற்றும் சுவாரசியமான தகவல்கள்...

குட்டி யானை கன்று என்று அழைக்கப்படுகிறது. இது பிறக்கும்போது சுமார் 115 கி்லோ எடையும், சுமார் மூன்று அடி உயரமும் இருக்கும். கன்றுகளால் முதலில் நன்றாகப் பார்க்க முடியாது, ஆனால் அவை தொடுதல், வாசனை மற்றும் ஒலி மூலம் தன் தாயை அடையாளம் காணுகிறது.

 

 

குட்டி யானைகள் முதல் இரண்டு மாதங்கள் தாய்க்கு மிக அருகில் இருக்கும். கன்றுகள் சுமார் இரண்டு வருடங்கள், சில சமயங்களில் நீண்ட காலம் தாயின் பாலை குடிக்கின்றன. அவர்கள் ஒரு நாளைக்கு சுமார் 11 லிட்டர் பால் வரை குடிக்கும்…!!! ஏறக்குறைய நான்கு மாத வயதில் யானைகள் சில தாவரங்களையும் சாப்பிடத் தொடங்குகின்றன, ஆனால் அவற்றின் தாயிடமிருந்து அதிக பாலும் எடுத்துக்கொள்ளும். பத்து வருடங்கள் வரை பால் குடித்துக்கொண்டே இருக்கும்.

 

 

 

முதலில், குட்டி யானைகளுக்கு அதன் தும்பிக்கையை என்ன செய்வது என்று தெரியாது. அது தும்பிக்கையை அங்கும் இங்கும் ஆட்டும், சில சமயங்களில் அதனை மிதிக்கவும் செய்யும். ஒரு மனிதக் குழந்தை தன் கட்டை விரலை சூப்புவதைப் போல குட்டி யானை தனது தும்பிக்கையை சூப்பும். சுமார் 6 முதல் 8 மாதங்களுக்குள், கன்றுகள் தங்கள் தும்பிக்கையை உண்ணவும் குடிக்கவும் பயன்படுதத கற்றுக் கொள்ளத் தொடங்குகின்றது. அவர்கள் ஒரு வயதிற்குள், அது தன் தும்பிக்கையை நன்றாகக் கட்டுப்படுத்த முடியும், மேலும் வயது வந்த யானைகளைப் போலவே, தங்கள் தும்பிக்கைகளைப் பிடிக்கவும், சாப்பிடவும், குடிக்கவும், குளிக்கவும் பயன்படுத்தும்.

 

 

 

பெண் யானைகள் கூட்டத்துடன் வாழ்நாள் முழுவதும் இருக்கும், ஆண் யானைகள் சுமார் 12 முதல் 14 வயது வரை தனிமையில் வாழத் தொடங்கும்.

 

 

99% யானை கன்றுகள் இரவிலே பிறக்கின்றன. கன்றுகள் நெற்றியில் சுருள் கருப்பு அல்லது சிவப்பு முடியுடன் பிறக்கும். யானைகள் தங்கள் குட்டிகளை வேட்டையாடுபவர்களிடமிருந்து பாதுகாக்கவும் அமைதியான சூழலை மேம்படுத்தவும் உருவாக்கப்பட்ட பரிணாமப் பண்பு இது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். 

 

 

யானைகள் மட்டுமே உலகில் குதிக்க முடியாத விலங்கு. இது அதன் அளவு மற்றும் எடை காரணமாக இருக்கலாம், இல்லையா? இருப்பினும், உண்மை என்னவென்றால், யானைகளால் ஏன் குதிக்க முடியாது என்பது விஞ்ஞானிகளுக்குத் தெரியவில்லை, ஏனெனில் சரியான பதிலைத் தீர்மானிக்க போதுமான ஆராய்ச்சி செய்யப்படவில்லை. குதிக்காமல் இருப்பது மட்டுமல்லாமல், குட்டி யானைகளால் ஒரே நேரத்தில் தரையில் இருந்து நான்கு கால்களையும் எடுக்க முடியாது. 

 

 

 

தாய் யானை குட்டி யானையைப் பெற்றெடுப்பதற்கு 22 மாதங்கள் கர்ப்பமாக இருக்கும். இந்த கர்ப்ப காலம் யானையை பூமியில் நீண்ட காலம் கர்ப்பமாக இருக்கும் பாலூட்டி ஆக்குகிறது. யானைகள் தங்கள் குழந்தைகளின் அளவு காரணமாக நீண்ட காலமாக கர்ப்பமாக உள்ளன - 100 கிலோவிற்கு மேலான எடையிலான குழந்தையை உருவாக்க அதிக நேரம் எடுக்கும்! ஒரு குட்டி யானை முழு வளர்ச்சியடைந்த மூளையுடன் பிறக்கிறது மற்றும் பல விலங்குகளைப் போலல்லாமல், அவை சற்று தள்ளாடக்கூடியதாக இருந்தாலும், பிறந்த உடனேயே நடக்க முடியும்.

 

 

 

பிறந்து சுமார் ஒரு வருடம் கழித்து, யானை தன் முதல் தந்தங்களை இழக்கும். அவை இரண்டு வயதாகும்போது, ​​அவற்றின் தந்தங்கள் திரும்ப வளர ஆரம்பிக்கின்றன, யானை முழுமையாக வளரும் வரை அவை பெரிதாகிக்கொண்டே இருக்கும். தங்கள் குழந்தைகளை சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பதற்காக, பெரிய யானைகள் தங்கள் ராட்சத தும்பிக்கைகளைப் பயன்படுத்தி குட்டி யானைகளின் மேல் மணலை தூவும். இது சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க அவற்றின் தோலில் ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்குகிறது.

 

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe