நம்ம ஊருக்கு இன்னிக்கு பொறந்த நாளுங்கோ.. 218வது கோவை தினம்..!

published 2 years ago

நம்ம ஊருக்கு இன்னிக்கு பொறந்த நாளுங்கோ.. 218வது கோவை தினம்..!

நம்ம ஊருக்கு இன்னிக்கு பொறந்த நாளுங்கோ.. 218வது கோவை தினம்..!

சிறுவாணி தண்ணியும் சில்லென்ற காற்றும் சுற்றி மேற்குத் தொடர்ச்சி மலையும் மலை அடிவார மருத மலை முருகனும்
 

மரியாதை தெரிஞ்ச மக்களும் வாங்க வணக்கங்க என்று அன்போடு அழைக்கும் நம்ம கோயம்புத்தூருக்கு இன்று 218 ம் ஆண்டுகள் ஆகிறது. 

தொழில் துறை நகரங்களான தலைசிறந்த நகரங்களில் முக்கியமாக ஒன்றான கோயம்புத்தூர் நகரமும் திகழ்கிறது அது மட்டுமல்லாமல் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற அழைக்கப்படும் கோவைக்கு சிறப்பு பெயர் உண்டு.

சுதந்திரத்திற்கு முன்பு கடந்த  1804 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சியில் நவம்பர் மாதம் 24-ம் தேதி கோவைக்கு மாவட்ட அந்தஸ்து கிடைத்தது. இதனைக் கொண்டாடும் விதமாக  நவம்பர் 24 கோயம்புத்தூர்க்கு பிறந்தநாளாக கோவை மக்களால்  கொண்டாடப்பட்டு வருவது சிறப்பு வாய்ந்தவை.  

அதுமட்டுமல்லாமல்  தமிழ்நாட்டின் முதல் திரையரங்கம் துவங்கப்பட்டது நம்ம ஊர்ல தான்.  

தற்போதைய வெரைட்டி ஹால் ரோட்டில் டிலைட் திரையரங்கம்   தமிழ்நாட்டிலேயே முதல்முதலாக 1914-ஆம் ஆண்டு முதல் திரையரங்கம் துவங்கப்பட்டது.  இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் கோவையின் தனித்துவத்தும் குறித்து.

எந்த ஊர் சென்றாலும் சொந்த ஊர் போல் ஆகாது என்பார்கள்.. எந்த ஊரில் இருந்து வந்தவருக்கும் சொந்த ஊர் போன்ற உணர்வைக் கொடுக்கும் இந்த கோவை மண்ணை கொண்டாடுவோம்...

நன்றி

நியூஸ் க்ளவுட்ஸ் குழு

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe