பெரியநாயக்கன்பாளையத்தில் தமிழ் சங்க அமர்வு

published 2 years ago

பெரியநாயக்கன்பாளையத்தில் தமிழ் சங்க அமர்வு

பெரியநாயக்கன்பாளையத்தில் தமிழ் சங்க நவம்பர் மாத இலக்கிய அமர்வு நடைபெற்றது. நாயக்கன்பாளையம் ஜீவகாருண்யா ஜீவ ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கென்னடி அண்ணாதுரை தலைமை வகித்தார்.

துடியலூர் தமிழ் சங்கத் தலைவர் கலையரசன், கவையன்புத்தூர் தமிழ் சங்க செயலாளர் கணேசன் , கண்ணன் ஆகிய முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தமிழறிஞர் அவ்வை நடராஜனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

சிறப்பு அழைப்பாளர்களாக நாயக்கன்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி பிரியா சந்துரு ஜெகவி, கோவனூர் ரவி ஆகியோர் பங்கேற்று குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

சொல்லரங்கத்தில் விடுதலை வேட்கை ஜோதிராவ்,  பரிதிமாற் கலைஞர் ஆகியோர் குறித்து ரகுபதி, குமார், ரங்கநாத மூர்த்தி ஆகியோர் பேசினர்.

"நாலடியாரில் கல்வி சிந்தனைகள்" என்ற தலைப்பில் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா தமிழ் துறை பேராசிரியர் அபிமன்யு பேசினார். நூல் அரங்கத்தில் காவல் கோட்டம், அணிவகுப்பு ஆகிய நூல்கள் குறித்து கணேசன், ஜெய் சாம்ராஜ் ஆகியோர் பேசினர்

கவியரங்கத்தில் தமிழ் ஆசிரியர்கள் விவேகானந்தர், முனியாண்டி தன்னம்பிக்கை பேச்சாளர் பாலதண்டாயுதபாணி, மாணிக்கம், தமிழ்பாலா, ஆரோக்கியதாஸ் ஆகியோர் கவிதை வாசித்தனர்.

சங்க செயலாளர் கனக சுப்பிரமணி தலைமையில் நடந்த பாட்டரங்கத்தில் கிருஷ்ணசாமி, கமலம் ஆகியோர் தேசபக்தி பாடல்களை பாடினார். சங்க பொருளாளர் கௌசி நன்றி கூறினார். இந்த அமர்வில் தமிழ் ஆர்வலர்கள் உட்பட பல பங்கேற்றனர்.

26வது கனெக்ஷனுக்கான விடை

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe