குஜராத்தில் அசத்தல் வெற்றி பெற்ற பா.ஜ.க ; கோவையில் கொண்டாடிய தொண்டர்கள்

published 2 years ago

குஜராத்தில் அசத்தல் வெற்றி பெற்ற பா.ஜ.க ; கோவையில் கொண்டாடிய தொண்டர்கள்

கோவை: குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக கோவையில் பா.ஜ.க தொண்டர்கள் பட்டாசுகள் வெடுத்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடியுள்ளனர்.

இன்றைய தினம் குஜராத் மற்றும் இமாசல பிரதேச மாநிலங்களின் தேர்தல் முடிவுகளால் நாடே பரபரப்பாயிருக்கிறது. ஒரு பக்கம் குஜராத்தில் 155+ தொகுதிகளில் பா.ஜ.க. சாதனை வெற்றியைப் பெற்றுள்ளது. இங்கே காங்கிரஸ் 17 தொகுதிகளில் மட்டுமே வென்று தோல்வியைத் தழுவியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி முதன்முறையாகத் தனது முத்திரையைப் பதித்து 12% வாக்குகளுடன், 5 வெற்றிகளுடன் மூன்றாமிடத்துக்கு வந்துள்ளது. இன்னொரு பக்கம் இமாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க. தனது ஆட்சியை காங்கிரஸ் வசம் பறிகொடுத்துள்ளது. இங்கே காங்கிரஸ் 40 தொகுதிகளிலும், பா.ஜ.க. 25 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

இதனிடையே குஜராத்தில் வரலாறு காணாத மாபெரும் வெற்றியை பதிவு செய்த பா.ஜ.க.,வின் வெற்றியை கொண்டாடும் விதமாக கோவை சரவணம்பட்டி மண்டலம் சார்பாக மண்டலத் தலைவர் ரத்தினசாமி தலைமையில் முன்னாள் மாமன்ற உறுப்பினர் மகாதேவன் முன்னிலையில் பாஜக நிர்வாகிகள் இணைந்து பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

இதில் மண்டல தொழில் நுட்ப பிரிவு தலைவர் ஜெயவர்த்தனவேலு உள்ளிட்ட பா.ஜ.க தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe