அத்தியாவசிய பொருளான தக்காளியின் விலை கிடுகிடு உயர்வு: மக்கள் அச்சம்

published 2 years ago

அத்தியாவசிய பொருளான தக்காளியின் விலை கிடுகிடு உயர்வு: மக்கள் அச்சம்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்: https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

கோவை: கடந்த ஒரு வாரமாக வங்கக்கடலில் நிலவிவரும் அசானி புயலின் காரணமாகத் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழையினால் பல காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

மழையினால் தக்காளி உள்பட நாட்டு காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டு, சந்தைக்கான வரத்தும் குறைந்துள்ளது. இதனால் அனைத்து காய்கறிகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மற்ற காய்கறிகளை விடத் தக்காளியின் விலை வெகுவாக உயர்ந்து கிட்டதட்ட இரு மடங்கை எட்டியுள்ளது.

கோவையில் சென்ற வாரம் கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கப்பட்ட தக்காளி இப்போது கடைகளில் கிலோ ரூ.70க்கும், உழவர் சந்தையில் ரூ.66 முதல் ரூ.68 வரையும் விற்கப்படுகிறது. எலுமிச்சம்பழத்தின் விலை கிலோ ரூ.180 ஆக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 

இது தொடர்பாக வியாபாரிகள்:

"கிணத்துக்கடவு, மதுக்கரை, பொள்ளாச்சி, காரமடை மற்றும் சுல்தான் பேட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் தக்காளி அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலிருந்தும் தக்காளி கோவைக்குக் கொண்டுவரப்படும். 

இங்கிருந்து கேரளா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் தக்காளி அனுப்பப்படும். கடந்து ஒரு வாரமாகப் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாகத் தக்காளி மற்றும் இதர காய்கறிகளின் விளைச்சல் சரிந்து விலை உயர்ந்துள்ளது.", என்று கூறினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe